செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 நவம்பர் 2020 (09:54 IST)

மீண்டும் உயர்ந்த முட்டை விலை… அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் முட்டை விலை சமீபகாலமாக ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் தற்போது 30 காசுகள் உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக முதலில் பாதிக்கப்பட்டது முட்டை வியாபாரிகள்தான். அந்தளவுக்கு முட்டை விலைக் குறைந்து ஒரு ரூபாய்க்கும் கீழே சென்றது. ஆனால் அதன் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. இந்நிலையில் சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுக்கு விற்கப்பட்டது. இது இதுவரை இல்லாத விலை ஏற்றமாகும். இன்றும் முட்டையின் கொள்முதல் விலை 5.25 ரூபாய் வரை சென்றது.

அதன் பின் படிப்படியாக குறைந்து தற்போது 4.40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கொள்முதல் விலை 30 காசுகள் உயர்ந்து 4.70 ரூபாயாக உயர்ந்துள்ளது.