திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (18:36 IST)

ஆஸி தொடருக்கு ரோஹித் ஷர்மா செல்லவில்லை… மீண்டும் திடீர் குழப்பம்!

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா செல்லவில்லை என சொல்லப்படுகிறது.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் டெஸ்ட் தொடருக்கான அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இப்போது அவர் ஆஸி அணிக்கான அணியோடு இணைந்து செல்லமாட்டார் என சொல்லப்படுகிறது. பெங்களூருவில் உள்ள பெங்களூரு வந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு சிகிச்சை பெற்று காயத்திலிருந்து முழுவதுமாக மீண்டால் மட்டுமே அவர் துபாய்க்கு செல்வார் என சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.