Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இறப்புக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி: உளறிய அமைச்சர்!

இறப்புக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி: உளறிய அமைச்சர்!

திங்கள், 2 அக்டோபர் 2017 (17:05 IST)

Widgets Magazine

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் நேற்று காலமானார். இவரது மறைவிற்கு எச்.ராஜாபை தொலைப்பேசியில் எச்.ராஜாவை தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உளறியுள்ளார்.


 
 
எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன் பேராசிரியராக இருந்தவர். அவர் நேற்று காலமானதையடுத்து திமுக செயல் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
 
மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எச்.ராஜாவின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எச்.ராஜாவின் தந்தை மரணத்துக்கு நேரில் சென்று இரங்கலை தெரிவித்தார் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், எச்.ராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையிலும், அவரின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாங்கள் இங்கு நேரடியாக வருகை தந்திருக்கிறோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்.ராஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கலும் வாழ்த்தும் தெரிவித்தார் என வாய் தவறி தவறுதலாக கூறினார்.
 
இதே போல நடிகர் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைந்த போது நடிகர் விஜகாந்த், விஜயகுமாரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20பேர் ...

news

தினகரன் கொள்ளையடித்த 20 ஆயிரம் கோடியை வைத்துள்ள ஜெயக்குமார்?

தான் கொள்ளையடித்த அந்த 20 ஆயிரம் கோடி ரூபாயை அமைச்சர் ஜெயக்குமாரிடம் தான் கொடுத்து ...

news

நான் மக்களை பிரித்துவிட்டேன்; மன்னிப்பு கேட்டு உருகிய ஃபேஸ்புக் நிறுவனர்

நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் மக்களை பிரித்து விட்டதற்காக மன்னிப்பு ...

news

நிர்வாண பூஜைக்கு அழைத்து நெருக்கமாக இருக்க வலியுறுத்திய போலி சாமியார்!

திருச்சியில் பெண் ஒருவரை போலி சாமியார் நிர்வாண பூஜைக்கு அழைத்த சம்பவம் நடந்துள்ளது. ...

Widgets Magazine Widgets Magazine