கருணாநிதியால் கூட அது முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ அசால்ட்!

கருணாநிதியால் கூட அது முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜூ அசால்ட்!


Caston| Last Modified திங்கள், 2 அக்டோபர் 2017 (12:10 IST)
தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அரசுக்கு போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் விரைவில் ஆட்சி கவிழும் என செயல் தலைவர் ஸ்டாலின் கூறி வருகிறார். இதற்கு அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

 
 
சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சி நீடித்து நிலைக்க வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பணிகளைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.
 
ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் போல் பேசி வருகிறார், விரைவில் ஆட்சி கலையும் என்று அவர் கூறுவது பலிக்காது என தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ. அதிமுக ஆட்சி நிலைக்கும், தமிழக அரசை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளதை குறிப்பிட்டார்.
 
மேலும் திமுக தலைவர் கருணாநிதியால் கூட அதிமுக அரசை அசைக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க ஸ்டாலினால் எப்படி முடியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :