1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (10:17 IST)

திருமாவளவனோடு கூட்டணி வைத்தால் திமுக உடையும்: ஹெச்.ராஜா

கடந்த சில நாட்களாகவே பாஜகவினர் திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு பதிலாக திருமாவளவனின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து வருகின்றனர். இருகட்சிகளின் தொண்டர்கள் இடையே கைகலப்பும் நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'தமிழகத்தில் சாதிக்கலவரத்தைத் தூண்டிய திருமாவளவன், அது எடுபடமாமல் போனதால் தற்போது மதக்கலவரத்தைக் கையில் எடுத்து வருவதாகவும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதால் அவரது முயற்சி எடுபடவில்லை' என்றும் ஹெச்.ராஜா கூறியுள்ளார். சமீபத்தில் இந்துக்கோவில்கள் குறித்து திருமாவளவன் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுகுறித்துதான் ஹெ.ராஜா இந்த கருத்தை கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி அமைத்தது குறித்து ஹெச்.ராஜா கூறுகையில், 'திருமாவளவனோடு கூட்டணி வைத்தால் மக்கள்நலக் கூட்டணி போல் திமுகவும் ஆர்.கே.நகரில் உடையும் என்றும் இதை விரைவில் திமுகவினர் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்