செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (10:14 IST)

தேர்தல் மீண்டும் நிறுத்தப்பட்டால் நல்லதுதான்: கங்கை அமரன்

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பாஜகவின் வேட்பாளராக போட்டியிட்ட கங்கை அமரன், இந்த முறை உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த கங்கை அமரன் கூறியதாவது: எனது உடல்நிலை காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை, தோல்வி பயத்தால் அல்ல என்று கூறினார். மேலும் யார் நல்லது செய்வார்கள் என யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர் தாமரைக்கு ஓட்டு போடுங்கள் என்று குறிப்பிட்டு கூறாதது ஆச்சரியத்தை அளித்தது.;
 
அதுமட்டுமின்றி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுவதாகவும், எனவே இந்த முறையும் தேர்தல் நிறுத்தப்பட்டால் நல்லதுதான் என கங்கை அமரன் கூறியது அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. ஏற்கனவே நடிகர் எஸ்.வி.சேகர் இந்த முறையும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள நிலையில் கங்கை அமரனும் அதே கருத்தை கூறியிருப்பதால் இந்த முறையும் தேர்தல் நடைபெறுமா? என்ற அச்சம் வாக்காளர்களை விட வேட்பாளர்களுக்கு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.