வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (17:06 IST)

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

Udhayanithi Jayakumar
நாடாளுமன்றத்தில் எம்பிக்களாக பதிவேற்றபோது உதயநிதி வாழ்க என கோஷமிட்டதன் மூலம் தாங்கள் கொத்தடிமைகள் என்பதை திமுக எம்.பி.க்கள் நிரூபித்துவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  விமர்சித்துள்ளார்.
 
சிலம்புச் செல்வர்" ம.பொ.சிவஞானத்தின் 119-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களவையில் உறுப்பினர்களாக நேற்று  பதவியேற்ற திமுக எம்பிக்கள், தாங்கள் ஒரு கொத்தடிமைக் கூட்டம் என்பதை நிரூபித்துவிட்டனர் என்றார்.
 
திமுகவின் மூத்த தலைவர்களான ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், செல்வகணபதி உள்ளிட்டோர், பதவியேற்பின்போது உதயநிதி வாழ்க என கோஷமிட்டனர் என்றும் நேற்று பெய்த மழையில் இன்று முறைத்த காளாண் உதயநிதி என்றும் விமர்சித்தார். ஆனால், திமுகவின் மூத்த தலைவர்களே தன்மானத்தை இழந்து கொத்தடிமைகள்போல் நடந்து கொண்டதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
திமுக எம்பிக்களின் இந்த செயல், வாக்களித்த மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது என்றும் கொத்தடிமைகளை டெல்லிக்கு அனுப்பிவிட்டோமே என்று வாக்களித்த மக்கள் வேதனைப்படுகின்றனர் என்றும் அவர் கூறினார். அடுத்ததாக திமுகவினர், இன்பநிதிக்கும் சேவை செய்வார்கள் என  ஜெயக்குமார் தெரிவித்தார். 


பதவிக்காக தன்மானத்தை இழந்து நிற்கிறார்கள் என்றும் இவர்களைப் போன்றவர்களை நினைத்துத்தான் எம்ஜிஆர் அன்றே அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு என பாடினார் என்றும் விமர்சித்தார்.