வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 12 ஏப்ரல் 2018 (11:52 IST)

கருப்பு நிற ராட்சத பலூன் - களை கட்டிய திமுகவினர் போராட்டம்

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடிக்கு கருப்பு நிற பலூன் மூலம் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அந்நிலையில், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
 
அதேபோல், தமிழகம் முழுவதும் திமுகவினர் தங்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அறிவாலயம் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், கருணாநிதி, ஸ்டாலின், திமுக செய்தி தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்துள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஒருபுறம் காவிரி மீட்பு பயணம் என அறிவித்து மு.க.ஸ்டாலின் நடை பயணத்தை இன்று காலை தொடங்கியுள்ளார்.
 
இது ஒருபுறம் இருக்க, திமுக முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் அமைக்கப்பட்டது. 20 அடி அகலமும், 15 அடி உயரமும் கொண்ட அந்த ராட்சத பலூனில் 'தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ' என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.
 
ஆனால், அந்த பலூனை பறக்கவிட போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியன் தலைமையில் ஆயிரக்கணக்கான திமுகவினர் தற்போது பேரணியை தொடங்கியுள்ளனர்.