செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 12 ஏப்ரல் 2018 (18:20 IST)

மோடியே திரும்பிப் போ - டிவிட்டரில் முதலிடம் பிடித்த ஹேஸ்டேக்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றன. அந்நிலையில்தான், ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க இன்று மோடி சென்னை வந்துள்ளார். 
 
இந்நிலையில், மோடியே திரும்பிப் போ என்கிற ஹேஸ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும், உலக அளவில் 4ம் இடத்தில் உள்ளது. அந்த ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் மோடிக்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர். அதேபோல், இது நம் பலத்தையும், எதிர்ப்பையும் காட்டுகிறது என தமிழர்கள் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.