1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK administrator committed suicide

கலைஞரை பார்க்க முடியாததால் தி.மு.க. நிர்வாகி தீக்குளித்து தற்கொலை

திமுக
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்க்க முடியாததால் மனமுடைந்த தி.மு.க. நிர்வாகி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலத்தை  இந்தியாவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டறிந்து அவர் விரைவில் நலம் பெற வாழ்த்தினர்.
 
நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அதித், சூர்யா, விஜய் ஆண்டனி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 
 
இந்நிலையில் அம்பத்தூர் 84-வது வட்ட துணை செயலாளராக இருந்த குமரன் என்பவர் 6 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் சந்திக்க முடியவில்லையே என மன வருத்ததில் இருந்துள்ளார்.
 
மனவேதனையில் இருந்த குமரன், திடீரென திக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  
அடுத்த கட்டுரையில்
எதிர்கட்சிகள் ஏன் வாயவே திறக்க மாட்டிங்கிறாங்க? மன்சூர் அலிகான் கேள்வி