வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (12:34 IST)

எதிர்கட்சிகள் ஏன் வாயவே திறக்க மாட்டிங்கிறாங்க? மன்சூர் அலிகான் கேள்வி

நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் நடந்தாலும் எதிர்கட்சியான திமுக ஏன் அதனை எதிர்த்து கேள்வி கேட்பதில்லை என மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் அம்ன்சூர் அலிகான் காவிரி விவகாரம், ஸ்டெர்லைட் விவாகரம், 8 வழிச்சாலை ஆகியவற்றிற்கு எதிர்த்து குரல் கொடுத்ததால் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.
 
இந்நிலையில்  தெருநாய்கள் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய அவர் சினிமா துறை அழிவை நோக்கி செல்வதற்கு காரணமே இந்த மத்திய அரசின் பணமத்திப்பிழப்பு நடவடிக்கையாலும் ஜிஎஸ்டியலும் தான். பலர் சிறு தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டனர்.
 
மேலும் இந்த 8 வழி சாலையால் யாருக்கு லாபம், எவனோ ஒருத்தன் 10 ஆயிரம் கோடி குடுக்குறான் அப்டிங்குறதுக்காக ரோடு போடலாமா? கூடிய சீக்கிரம் தாய்ப்பாலையும் இவனுங்க வீட்டு வைக்க மாட்டானுங்க . தமிழன் முழிச்சிட்டிருக்கும்போதே அவன் பேண்ட்டையும் அவிழ்க்க போறாங்க.
 
நாட்டில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் போதும் எதிர்க்கட்சிக்காரங்க ஏன் அமைதியா இருக்காங்க? இவ்வளவு எம்எல்ஏக்கள் இருந்தும் வாயே திறக்கலேன்னா எப்படி? அதுக்கும் காரணம் கமிஷன்தானா? 
 
இனி யாரையும் நம்பி இருந்தால் ஆகாது எனவே எல்லா தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் என ஆவேசமாக பேசினார் மன்சூரலிகான்.