திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (14:19 IST)

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா - எடப்பாடிக்கு செக் வைத்த நீதிமன்றம்

பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
சமீபகாலமாக, தமிழக அரசு விழாக்களில், குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கு பெறும் கூட்டங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைப்பது அதிகரித்து வருகிறது.
 
வருகிற செப்.30ம் தேதி நடைபெறும் எடப்பாடி தலைமையில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும், பள்ளிக் குழந்தைகளை பங்கேற்க வைக்க அதிமுகவினர் திட்டமிட்டிருந்தனர்.
 
இந்நிலையில், இதற்கு தடை விதிக்குமாறு சமூக ஆர்வலரும், மாற்றம் இந்தியா என்ற அமைப்பை நடத்தி வருபவருமான நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளிசாரா விழாக்களுக்கு பள்ளிக்குழந்தைகளை அழைத்து செல்வதற்கு தடை விதித்தார். மேலும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுக்கும் வரை பள்ளிக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
 
அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.