வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (07:58 IST)

கொடைக்கானலில் விபச்சாரம் : புரோக்கர் கைது ! வட இந்திய அழகிகள் மீட்பு !

கொடைக்கானல் காட்டேஜ்களில் வட இந்திய அழகிகளைக் கொண்டு நடத்தப்பட்ட விபச்சாரத்தைப் போலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

சீர்காழியைச் சேர்ந்த பிரேம் குமார் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர்கள் தங்குவதற்கு நல்ல காட்டேஜ் தேடிய போது அவர்களைத் தொடர்புகொண்ட மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த விலையில் காட்டேஜ்கள் இருப்பதாக சொல்லியுள்ளார். மேலும் தன்னிடம் வட இந்திய அழகிகள் இருப்பதாகவும் தாங்கள் ஆசைப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் எனவும் அதற்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அவருடன் சென்ற பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அந்த காட்டேஜுக்குள் நுழைந்ததும் போலீஸுக்கு செல்போன் மூலம் தகவல் சொல்லியுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் விபச்சார புரோக்கர் மோகன் ராஜாவை கைது செய்து அங்கு இருந்த வட இந்திய பெண்களை மீட்டனர்.

மோகன்ராஜா கைதானதை அறிந்த அவரது கூட்டாளிகள் ஸ்டீபன் மற்றும் சுரேஷ் தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட 6 வடமாநில இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட மோகன் ராஜாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.