கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் – ஈரோட்டில் இரண்டு புரோக்கர்கள் கைது

Last Modified செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:27 IST)
ஈரோட்டில் வீட்டுக்குள் அடைத்து வைத்து கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரு புரோக்கர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் விபச்சாரம் நடப்பதாகப் போலிஸாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து சந்தேகப் பகுதிகளில் ரகசிய கண்காணிப்பு செய்த போலிஸார் ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த இரண்டு பெண்களைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் அந்த பெண்கள் இருவரும் கல்லூரி மாணவிகள் என்றும், வெளி ஊரிலிருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. தங்களை இந்தத் தொழிலில் ஈடுபடுத்திய  புரோக்கர்கள் இருவர் பற்றிய தகவல்களை கூறியுள்ளனர்.

தோழிகள் மூலம் சம்மந்தப்பட்ட புரோக்கர்களின் செல்போன் எண் கிடைத்ததாகக் கூறியுள்ளனர். குறைந்த நேரமே ட்யூட்டி கைநிறைய காசு என ஆசை வார்த்தைக் காட்டி அவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் விஜயகுமார் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருப் பெண்களையும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண்கள் காப்பகத்துக்குப் அனுப்பி வைத்தனர்.இதில் மேலும் படிக்கவும் :