போரால் எகிறிய சமையல் எண்ணெய் விலை..! – கவலையில் இல்லத்தரசிகள்!
உக்ரைனில் போர் நடந்து வருவதால் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் விலை அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 80 சதவீதம் உக்ரைனில் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் போர் தொடங்கியுள்ளதால் சூரியகாந்தி எண்ணெய் விலை ரூ.40 வரை விலை உயர்ந்துள்ளது.
முன்னதாக ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் ரூ.150 வரை விற்பனையாகி வந்த நிலையில் போர் தொடங்கிய பின் தற்போது லிட்டர் ரூ.196 வரை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதேபோல மலேசியா, இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலின் விலையும் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.