தடை விதித்த அமெரிக்காவுக்கே இந்த நிலையா..? – பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு!
ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவில் பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பெட்ரோல் விலை 14 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வை கண்டுள்ளது. ஒரு கேலன் (4.5 லிட்டர்) பெட்ரோலின் விலை 4.17 டாலர்களாக விலை உயர்ந்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிற நாடுகளிலும் பெட்ரோல் விலை உயரலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது.