முழுமையான பட்ஜெட் தாக்கல்! நேரடி ஒளிபரப்பு! – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு 2022-23 ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சியமைத்த நிலையில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் முதன்முறையாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் மார்ச் 18ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மார்ச் 18ம் தேதி சட்டமன்றம் கூடும் நிலையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும், பட்ஜெட் தாக்கல் மற்றும் கேள்வி நேரம் ஆகியவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.