1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2016 (09:53 IST)

ஜெய ஜெய ஜெயரே ஜெயா

துன்பம் எனும் யாழ் மீட்டி, தங்க மங்கை  ஒருவர் நம்மை விட்டு விடை பெற்றார்.


 

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட வீர மங்கை !

தன்னை எப்போதும் தனி தன்மையுடன் வெளிப்படுத்திய நாச்சியார் !

சமூக நீதியை இட ஒதுக்கீட்டால் உறுதி செய்த வீர மணியம்மை !

அனைத்தையும் அம்மா மயம் செய்து தமிழகத்தை  ஆண்ட மீனாட்சி சுந்தரேஸ்வரி !

நம்மை விட்டு செல்கிறார்

வலது தோளில் வெற்றி தேவதையும், இடது  தோளில் அதிஷ்டா தேவதையும், பெற்ற பாக்கிய லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

ஆலயம் தோறும் அன்னம் இட்ட கைகளுக்கு சொந்தக்கார தானிய லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

பழிக்கப்பட்டார், பழி சுமத்தப்பட்டார், ஆனாலும் வீறு கொண்டு எழுந்த தைரிய லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

ஆழி சூழ் துன்ப மேகங்கள் சூழ்ந்த போதும், உள்ள வலிமையுடன் எழுந்த  கச லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

அம்மா என்றால் அன்பு ; கடைசி தொண்டனுக்கும் பதவி தந்த சந்தான லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

காவேரியில் தமிழனுக்கு உள்ள உரிமையை உறுதி செய்த பொன்னியின் செல்வி, விஜய லட்சுமி !

நம்மை விட்டு செல்கிறார்

ஒரு நாளும் தளர்வறியா மனமும், ஈகை உள்ளமும், தாலிக்கு தங்கம் தன லட்சுமி  !

நம்மை விட்டு செல்கிறார்

இது காலன் செய்த சதி ! கூப்பாடு போட்டு அழும் இந்த ஜன பிரளயத்தை விட்டு விடை பெற்றார் மக்களின் மகா ராணி !



இரா .காஜா பந்தா நவாஸ்,  
பேராசியர்
[email protected]