திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 மார்ச் 2018 (16:23 IST)

ஏர்செல் மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் விற்பனையாளர் சங்கம் மனு!

ஏர்செல் நிறுவனம் தனது சேவைகலை முடக்கிகொண்ட நிலையில், நிதி நெருக்கடி காரணமாக நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்க மனு ஒன்றையும் சமீபத்தில் அளித்தது. 
 
தமிழகத்தில் ஏர்செல் சேவை கடந்த வாரம் இரண்டு நாட்கள் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் போர்ட் எண் மூலம் வேறு நெர்வொர்க்கு மாற முயற்சித்து வருகின்றனர். 
 
பின்னர் ஏர்செல் நிறுவனத்தின் சேவை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதியுடன் முழுவதுமாக நிறுத்தப்படும் என டிராய் அறிவித்தது. அதோடு வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் எண்ணை போர்ட் செய்ய கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ஏர்செல் நிறுவனத்தின் இந்த முடிவால் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக முதலைச்சரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.