திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (17:51 IST)

திவாலாகிவிட்டோம்... அறிவித்துவிடுங்கள்: ஒப்புக்கொண்ட ஏர்செல்!

ஏர்செல் நிறுவனம் திவாலாகிவிட்டதாக அந்நிறுவனமே அறிவிக்க கோரி தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை அளித்துள்ளது. 
 
ஏர்செல் ஜனவரி மாதத்தோடு ஆறு மாநிலங்களில் தனது சேவையை நிறுத்திக்கொண்டது. அதோடு கடந்த வாரம் தமிழ்கத்தில் சேவை பாதிக்கப்பட்டு வாடிக்கையாளர் அவதிக்குள்ளாகினர். 
 
ஏதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவையில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் ஏர்செல் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கியது. 
 
மீண்டும் ஏர்செல்லுக்கும், டவர் நிறுவனங்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ஏர்செல் சேவைகள் மீண்டும் முடக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஏர்செல் பரபரப்பு மனுவை அளித்துள்ளது. 
 
எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளிடம் ஏர்செல் நிறுவனம் கடன் பெற்றுள்ளது. ரூ.15,500 கோடி கடன் ஏற்பட்டதை அடுத்து திவால் என அறிவிக்க ஏர்செல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் மனு அளித்துள்ளது. 
 
மேலும், இதனால் வாடிக்கையாளர்கள் விரைவாக தங்களது ஏர்செல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனத்திற்கு போர்ட் செய்துக்கொள்ளும்படியும் வலியுறுத்தி உள்ளது.