ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டம்: தேதி அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி
ஆளுநர் மாளிகையை முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வருகிறார் என்று கூறிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் டிசம்பர் 29ஆம் தேதி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்படும் என்று தெரிவித்தார்
திருக்குறள் என்பது இந்துக்களின் குரல் என்பது உலகப் பொது மறையை இழிவுபடுத்தும் செயலாகும் என்றும் ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகம் போல் பயன்படுத்தும் ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்
டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Edited by Siva