செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (13:01 IST)

ஆளுனரை விரட்ட திமுக முயற்சிப்பது ஏன்? – வானதி சீனிவாசன் பதில்!

தமிழக ஆளுனராக உள்ள ஆர்.என்.ரவியை மாற்ற கோரி திமுக கூட்டணி கட்சிகள் அனுப்பியுள்ள கடிதம் குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுனராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் சமீப காலமாக அவரது செயல்பாடுகளுக்கும், தமிழக அரசுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.

முக்கியமாக சமீப காலங்களில் நிகழ்ச்சிகளில் ஆர்.என்.ரவி பேசும் கருத்துகளோடு அரசியல் கட்சிகளுக்கும் முரண்பாடுகள் எழுந்து வரும் நிலையில் ஆளுனரை நீக்க கோரி திமுக கூட்டணி கட்சிகள் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளன.


திமுக கூட்டணி கட்சிகளில் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் “ஆளுனர் எல்லா உண்மைகளையும், தவறுகளையும் கண்டுபிடித்து விடுவதுடன், அதை மத்திய உள்துறை மற்றும் பிரதமருக்கும் சொல்லிவிடுகிறார் என திமுகவுக்கு வருத்தம் இருக்கலாம்.

திமுகவுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஆளுனர் செயல்படுகிறார். எனவே ஆளுனர் மீது வெறுப்பையும், மோதல் போக்கையும் கடைபிடிப்பதை விட்டு திமுக அரசு ஆளுனருடன் இணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Edit By Prasanth.K