1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (11:26 IST)

ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் காய்ச்சல் வந்துவிடுகிறது: தமிழிசை

Tamilisai
ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு திடீர் குளிர் காய்ச்சல் வந்து விடுகிறது என திமுகவை மறைமுகமாக புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் இதில் எந்தவிதமான விதி மீறலும் இல்லை என்றும் ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்யப்படுவதாகவும் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆளுநர் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஒரு சிலர் கூறி வருவதாகவும் ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் காய்ச்சல் ஏற்பட்டுவிடும் திமுகவை மறைமுகமாக தமிழிசை சௌந்தரராஜன் கிண்டலாக தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran