திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 14 நவம்பர் 2017 (17:21 IST)

ஹிந்தியில் பேசுங்கள் ; தமிழக மீனவர்களை சுட்ட கடற்படை வீரர்கள்

கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்த போது, அங்கு இந்திய கடற்படை வீரர்கள் அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, மீனவர்கள் தமிழில் பேசியது கேட்டு அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
 
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசு எனக்கூறி மீனவர்களை தாக்கிய அவர்கள், ஒருகட்டத்தில் ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆரோக்கியம்(38) மற்றும் ஜான்சன்(30) என்ற இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். அதன் பின் கரை திரும்பிய அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த துப்பாக்கி சூட்டை நாங்கள் நடத்தவில்லை என கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.
 
கடலோர காவற்படை வீரர்களை கண்டித்து போராட்டம் நடத்த மீனவர்கள்  முடிவு செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.