அமெரிக்காவில் நடந்தால் கொலை; இந்தியாவில் நடந்தா? கவலையற்ற சுஷ்மா


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 7 மார்ச் 2017 (15:01 IST)
தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.

 

 
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ(22) என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த டிட்டோ என்ற மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த சம்பவத்தால் மீனவர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இந்திய வெளியுறதுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
 
அமெரிக்காவில் இந்தியர்கள் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்த சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர் இந்தியாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவிலை. அவரது ட்விட்டர் பக்கத்தில் கூட எந்த பதிவும் இல்லை.
 
தற்போது மீனவர்கள் உடலை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளியுறத்துரை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :