செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (05:35 IST)

ஆந்திர மீனவர்களே! நீங்களுமா?

தமிழக மீனவர்கள் கடந்த பல வருடங்களாக இலங்கை ராணுவத்தினர்களால் கைது செய்யப்பட்டு படகையும் பறிகொடுக்கும் அவல நிலை நடப்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கின்றோம். இதற்கு முடிவுகட்ட எந்த மத்திய , மாநில அரசும் அக்கறை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் நேற்று தமிழகத்தை சேர்ந்த 140 மீனவர்களை ஆந்திர மாநில மீனவர்கள் பிடித்து சிறை வைத்ததாக வெளிவந்துள்ள் செய்தி அனைவரையும் அதிர செய்துள்ளது. அண்டை நாடுகள் தான் தமிழக மீனவர்கள் விஷயத்தில் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றால் அண்டை மாநில மீனவர்களும் அதே கொடுமையை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
சென்னை, காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் 140 பேரை, ஆந்திர எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி அம்மாநில மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளதாகவும், பிடித்துவைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க காசி மேடு விசைப் படகு உரிமையாளர்கள் பேச்சு வார்த்தை நடத்த ஆந்திரா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு மீனவர்களையும் அவர்களுடைய விசைப் படகுகளையும் மீட்க தகுந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டுள்ளது.