1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (18:29 IST)

7 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது நெஞ்சை பதறச் செய்கிறது: முதல்வர் பழனிசாமி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த குற்றத்தை செய்த 26 வயது ராஜேஷ் என்ற இளைஞர் முதலில் கைது செய்யப்பட்டார்.
 
அதன்பின்னர் தற்போது இந்த குற்றத்தில் ஈடுபட்ட இன்னொருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏம்பல் என்ற ராஜா என்ற 25 வயது இளைஞரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், இதனையடுத்து போலீசார் அவரையும் கைது செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
இந்த நிலையில் அறந்தாங்கி 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நெஞ்சை பதறச் செய்கிறது. இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.