திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (15:56 IST)

கண்மாயில் சடலமாக கிடந்த 7 வயது சிறுமி: பலாத்கார தடயங்கள்?

புதுக்கோட்டையில் தேடப்பட்டு வந்த 7 வயது சிறுமி சடலமாக கண்மாயில் தூக்கி வீசப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காணாமல் போன சிறுமியை போலீஸார் தேடி வந்த நிலையில், காயங்களுடன் கண்மாயில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
நேற்று முந்தினம் காணாமல் போல சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டு உடல் உடற்கூராய்வு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் பலாத்காரம் செய்யப்பட்டாளா என சந்தேகம் எழுந்துள்ளது. 
 
சிறுமிக்கு என்ன நேர்ந்தது, யார் இப்படி செய்தது என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வரும் போலீஸார் விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பார்கள் என நம்பப்படுகிறது.