பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு வாழ்த்து கூறிய முக ஸ்டாலின், அண்ணாமலை..!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் டாக்டர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
Edited by Siva