Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போங்கு காட்டும் கிரிஜாவுக்கு கல்தா கொடுக்க இரண்டு முக்கிய தலைகள் திட்டம்!

போங்கு காட்டும் கிரிஜாவுக்கு கல்தா கொடுக்க இரண்டு முக்கிய தலைகள் திட்டம்!


Caston| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (12:20 IST)
தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகார் ராவ் மாற்றப்பட்டு புதிய முழு நேர ஆளுநர் நியமிக்கப்பட்டதை போல, தற்போது உள்ள தலைமைச் செயலரும் மாற்றப்பட உள்ளதாக ஆளும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

 
 
வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும் கோபத்தில் இருந்தார். சமாதான முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தனது அதிருப்தியை குடியரசுத் தலைவரிடமும் கூறியுள்ளார் வித்யாசாகர் ராவ். இதனால் அவர் தமிழக அரசுக்கு எதிராக எதுவும் விபரீதமான முடிவு எடுத்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக மாற்றப்பட்டார்.
 
இது எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தரப்புக்கு சற்று நிம்மதியை தந்தாலும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தற்போது முட்டுக்கட்டையாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் யாரும் அமைச்சர்கள் சொல்வதை கேட்பதில்லையாம். அமைச்சர்கள் தங்கள் செகரெட்டரிகிட்ட சொன்னால், தலைமைச் செயலர் கிட்ட பேசுங்க என சொல்கிறார்களாம்.
 
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சேலத்தில் வைத்து துணை முதல்வர் ஓபிஎஸ் பேசியதாக ஆளும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதில், தனது துறையில் உள்ள சின்ன வேலைகளை கூட செய்து கொடுக்க மாட்டேங்குறாங்க. இது தொடர்பாக தலைமைச் செயலரிடம் பேசினால், அவர் ஆளுநர் உத்தரவுன்னு சொல்றாங்க.
 
எல்லாரும் எத்தனை நாட்களுக்கு இந்த ஆட்சி நீடிக்க போகுதுன்னு பேசிக்கிறாங்க. இதுக்கு மேல தலைமைச் செயலாளர் நம்ம பேச்சை கேட்பாங்களான்னு தெரியல்ல என ஓபிஎஸ், ஈபிஎஸிடம் விவாதித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் டெல்லியை தொடர்பு கொண்டு தலைமைச் செயலர் மாற்றத்துக்கு பாசிட்டிவாக முடிவு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் தலைமைச் செயலர் மாற்றம் இருக்கும் என ஆளும் கட்சி வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :