விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல்


sivalingam| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (07:33 IST)
ஆயுதபூஜை, விஜயதசமி, மொகரம் பண்டிகை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையை முடிந்து இன்று அனைவரும் சென்னை திரும்பி கொண்டிருப்பதால் சென்னை புறநகரின் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 


 
 
குறிப்பாக சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவிப்பில் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பேருந்துகள், கார்கள் வந்து கொண்டிருப்பதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசைகட்டி நிற்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகளிலும் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமாக சரியான பாதையை தேர்வு செய்து பயணம் செய்யும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :