Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சேலம், மதுரையிலிருந்து ஆம்னி பஸ் பிடித்து வந்து சென்னையில் டெங்குவை பரப்பும் கொசுக்கள்!

சேலம், மதுரையிலிருந்து ஆம்னி பஸ் பிடித்து வந்து சென்னையில் டெங்குவை பரப்பும் கொசுக்கள்!


Caston| Last Modified செவ்வாய், 3 அக்டோபர் 2017 (11:15 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

 
 
இந்நிலையில் சென்னையில் இந்த டெங்கு காய்ச்சலை சேலம், மதுரை போன்ற ஊர்களில் இருந்து ஆம்னி பஸ்கள் மூலம் வந்த கொசுக்களே பரப்புவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் கொசு ஒழிப்பு, டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக உள்ளது. இதனால் இங்கு ஏடிஎஸ் வகை கொசுக்கள் இருந்தாலும் அதன் வீரியம் அதிகமாக இருக்காது.
 
மதுரை, சேலம் உள்ளிட்ட மற்ற நகரங்களில் சென்னையை போன்ற தீவிரமான கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் கிடையாது. இதனால் அந்த நகரங்களில் உள்ள டெங்கு பரப்பும் கொசுக்கள் அதிக வீரியத்துடன் இருக்கும்.
 
குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பஸ்கள், ரயில் பெட்டிகளில் புகுந்து இந்த கொசுக்கள் சென்னைக்கு வந்துள்ளன. அவற்றால் தான் சென்னையில் டெங்கு பரவியுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :