திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (17:56 IST)

இரண்டு நாட்களில் 135 கி.மீ ஓட்டம்! – சாதனையில் இணையும் சென்னை இளைஞர்!

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரபல நடிகர் மிலிந்த் சோமன் நடத்தும் ஓட்ட பந்தய மாரத்தானில் கலந்து கொள்ள சென்னை இளைஞர் தேர்வாகியுள்ளார்.

சென்னையை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஜெய் அஸ்வானி. சிறுவயதிலிருந்தே ஓட்ட பந்தயம், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வமுடைய இவர் மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு விருதுகள் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு முடியவுள்ள நிலையில் நடிகர் மிலிந்த் சோமன் நடத்தும் “மிலிந்த் சோமன் மிஷன் பிட் இந்தியா” என்ற நிகழ்வின் மூலமாக டிசம்பர் 30 முதல் 31 வரை இரண்டு நாட்களில் அசாமிலிருந்து மேகாலயா வரை 135 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சென்னை மாணவர் ஜெய் அஸ்வானியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.