சென்னை ஐகோர்ட்டில் இன்று முதல் நேரடி விசாரணை கிடையாது: பதிவாளர் அறிவிப்பு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் நேற்று சுமார் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசின் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் ஏற்கனவே ஒரு சில மாநிலங்களில் ஐகோர்ட்டுகளில் நேரடி விசாரணை கிடையாது என்றும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டிலும் இன்று முதல் நேரடி விசாரணை கிடையாது என்றும் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என்றும் சென்னை ஐகோர்ட் பதிவாளர் தனபால் அவர்கள் தெரிவித்துள்ளார்