1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:59 IST)

ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி பெரிய குற்றம் செய்யவில்லை: ராஜவர்மன் பேட்டி

ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி பெரிய குற்றம் செய்யவில்லை: ராஜவர்மன் பேட்டி
ஓடி மொழியும் அளவுக்கு ராஜேந்திர பாலாஜி எந்த குற்றமும் செய்யவில்லை என முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.
 
ரூபாய் 3 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்பட்ட முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனிடம் இன்று விசாரணை நடைபெற்றது
 
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் ராஜவர்மன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்
 
அப்போது அவர் நீதிமன்றம் மூலம் தான் நிரபராதி என ராஜேந்திரபாலாஜி நிரூபிப்பார் என்றும், ஓடி ஒளியும் அளவுக்கு ராஜேந்திரபாலாஜி பெரிய குற்றம் ஒன்றும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்