திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2017 (15:47 IST)

பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார் - மீண்டும் சிறை?

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தன்னிடம் பண மோசடி செய்தார் என ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
ஏராளமான பண மோசடி புகார்களில் சிக்கிய நடிகர் சீனிவாசன், சிறைக்கு சென்று விட்டு சமீபத்தில் வெளியே வந்தார். தற்போது அவர் மீண்டும் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீண்டும் புகார் அளித்துள்ளார்.
 
புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த தயாநிதி(34) என்பவர், 2015ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பவர்ஸ்டார் சினீவாசன் தன்னிடம் ரூ.4 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், ஆனால், வாய்ப்பு எதுவும் வாங்கி தரவில்லை. மேலும், வாங்கிய பணத்தை திருப்பி தரவும் மறுக்கிறார் என வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.