Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூப்பர் ஸ்டாருக்கே வசூல் வாங்கி கொடுத்தவர்டா எங்கள் 'தல'. கெத்து காட்டும் அஜித் ரசிகர்கள்


sivalingam| Last Modified திங்கள், 20 மார்ச் 2017 (21:57 IST)
தமிழ் சினிமா உலகில் 'தல' அஜித் என்றால் ஒரு தனி மரியாதையே உண்டு. அஜித்தின் நடிப்பு மட்டுமின்றி அவரது மனித நேயத்துக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டே வருகின்றனர்.


 


இந்நிலையில் அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக் என்பதாலே வரும் 24ஆம் தேதி வெளிவரவுள்ள கட்டமராயுடு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு தமிழகத்தில் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் ஹீரோ பவன்கல்யாண் ஆந்திராவில் வேண்டுமானால் சூப்பர் ஸ்டாராகவோ அல்லது பவர்ஸ்டாராகவோ இருக்கலாம்,. ஆனால் தமிழ்நாட்டில் அவருக்கு என்று ரசிகர் கூட்டம் இல்லை. இருப்பினும் இந்த படம் தமிழகத்தில் மட்டும் 150 திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அதற்கு அஜித் ரசிகர்கள் கொடுக்கும் அதிகபட்ச ஒத்துழைப்புதான் காரணம் என்று 'கட்டமராயுடு' படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள  நாகா மூவிஸ் நிறுவன தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார். இது அஜித் சாரின் படம் என்பதால், அவரின் ரசிகர்களும் படத்தை பார்க்க விரும்புகிறார்கள். எனவேதான் தைரியமாக இந்த முயற்சியை எடுத்துள்ளேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :