வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (17:48 IST)

என்னை தோற்கடித்ததற்கு நன்றி – வேட்பாளரின் வித்தியாசமான போஸ்டர் !

தன்னைத் தோற்கடித்ததற்கு நன்றி தெரிவித்து வேட்பாளர் ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரு கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.  ஆனால் முதல்முறையாக தோற்ற வேட்பாளர் ஒருவர் தனக்கு வாக்களிக்காத மக்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.

முருகேசன் என்ற அந்த வேட்பாளர், தனது போஸ்டரில் ‘கோத்துவார்ப்பட்டி 2 ஆவது வார்டு உறுப்பினராக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட ஆர் முருகேசன் ஆகிய என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு நீங்க இப்படி செய்வீங்கன்னு கனவுல கூட எதிர்பார்க்கல’ எனத் தெரிவித்துள்ளார்.