1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (10:56 IST)

தோல்வி பயமா? எண்ணிக்கையில் பம்மும் அதிமுக: ஓபிஎஸ் அப்செட்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் புதிதாக பிரிக்கப்பட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  
 
தற்போது வரை எண்ணப்பட்டுள்ள வாக்குகளில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் மற்றும் மாவட்ட கவுனிலர் தேர்தலில் அதிமுகவை விட திமுக முன்னிலையில் உள்ளது.  மேலும், யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி கனிசமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என முன்கூட்டியே பேட்டி அளித்துள்ளார். ஒரு வேலை தோல்வி பயத்தில் இவ்வாறு அவர் கூறியிருப்பரோ என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.