செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 மே 2022 (11:20 IST)

பிற்பகல் 1.00 மணி வரை மட்டுமே... ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு!

மே மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
 
சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மே மாதத்திற்கான ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
 
இந்த முகாம் மூலம் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். 
 
மேலும் இந்த முகாமை குடும்ப  அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.