வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (18:39 IST)

ஆம்னி பேருந்துகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு பேருந்து உரிமையாளர்களே பொறுப்பு- அரசு!

omni bus chennai
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிரான ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வழக்கை இன்று   உச்ச நீதிமன்றம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது.
 
சமீபத்தில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
 
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோயம்பேட்டில் பேருந்துகளை  நிறுத்தக்கூடாது, கிளாம்பாக்கத்தில் தான்  நிறுத்த வேண்டும் என அரசு  உத்தரவிட்டது. இதற்கு ஆம்னி பேருந்து  உரிமையாளர்கள் எதிர்ப்பு  கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 
 
இந்த நிலையில், , கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிரான ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வழக்கை இன்று   உச்ச நீதிமன்றம் தள்ளுபடி  செய்து உத்தரவிட்டுள்ளது.
 
இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் கூறப்பட்டதாவது: ஆம்பி பேருந்துகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு பேருந்து உரிமையாளர்கள்தான் பொறுப்பாவர் என்று கூறியது.
 
இந்த நிலையில், ''போரூர் சூரப்பட்டு, கிளாம்பாக்கம் தவிர வேறு இடங்களில் பேருந்துகளை நிறுத்தினால் ஆம்னி பஸ் அதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ''என்று எச்சரித்துள்ளது.
 
மேலும், ''ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட முன்பதிவு செயலிகளில் பொதுமக்களை குழப்பும் வகையில் ஆம்னி பஸ் உரிமையாளர்காள் பதிவிடக்கூடாது'' என்றும், ''பொதுமக்களை குழப்பும் வகையில் செயல்படும் ஆம்னி பேருந்து அதிபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.