வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 19 பிப்ரவரி 2024 (12:35 IST)

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மனு: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!

கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதி கோரி ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது, ஏன் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்தில் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கிய நிலையில் கோயம்பேட்டில் இருந்து கிளம்பிய தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளம்பக் கூடாது என்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.

இந்த நிலையில் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இது குறித்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை அடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Edited by Mahendran