ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (16:32 IST)

நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி..! போலீசார் காப்பாற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு..!!

sucide attempt
பூந்தமல்லி நீதிமன்ற வளாகத்தில் 51 வயது நபர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ருத்ர மூர்த்தி(51). இவர் தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.12 லட்சம் கடன் வாங்கியதாகவும்,  முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
 
இதனால் திருவள்ளுரில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் வங்கியின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு வங்கிக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடனாக பெற்ற தொகைக்கு வங்கிக்கு காசோலை கொடுத்த விவகாரத்தில் செக் மோசடி வழக்கு பூந்தமல்லியில் உள்ள விரைவு நீதிமன்றத்திலும் வங்கி சார்பில் வழக்கு நடந்து வந்தது.
 
இன்று பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்த ருத்ரமூர்த்தி, நீதிபதியை பார்த்து தனது குறைகளை கூற வேண்டும் என கூறியதாகவும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் வாங்கி வந்த பெட்ரோலை எடுத்து நீதிமன்ற வளாகத்திலேயே உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
ALSO READ: புதிய உச்சத்தை தொட்ட பங்கு சந்தை..! முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!!
இதனை கண்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், வழக்கறிஞர்களும் தடுத்து நிறுத்தி அவரது உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினார்கள். 
 
பின்னர் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று போலீசார் குளிப்பாட்டி விட்டு புதிய உடைகளை வாங்கி அணிய வைத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.