ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (13:15 IST)

கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவி மறுப்பது கொடுமைப்படுத்தும் செயல் - நீதிமன்றம்

மத்திய பிரதேச மாநிலத்தில்  கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மனைவி மறுப்பது  கொடுமைப்படுத்தும் செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது

மத்திய பிரதேசம் மாநிலத்தில், 2006-ல்  திருமணமான 16 நாட்களில் தான் வெளிநாடு புறாப்படும் வரை உடலுறவுக்கு மனைவி சம்மதிக்காததால், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கணவர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், கீழமை நீதிமன்றம் அவருக்கு விவாகரத்து தர மறுத்தது. இதையடுத்து, அவர் உயர் நீதிமன்றம் சென்ற நிலையில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து விவாகரத்து வழங்கியுள்ளது.

மேலும், உடல் ரீதியான காரணங்கள் எதுவுமின்றி நீண்டகாலம் கணவருடன் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவி மறுப்பது, அவரை மனதளவில் கொடுமைப்படுத்தும் செயல். இதனை காரணமாகச் சொல்லி விவாகரத்து பெறலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.