புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (07:30 IST)

தமிழகத்தில் ஏப்ரல் 18ல் தேர்தல்: சரியான தேதிதானா?

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று அறிவித்த தேர்தல் ஆணையம், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் காலியாகவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதி சரியான தேதிதானா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
ஏனெனில் தேர்தலுக்கு முந்தைய நாளான ஏப்ரல் 17ஆம் தேதி மகாசிவராத்திரி விடுமுறை தினம். அதேபோல் தேர்தலுக்கு அடுத்த நாளான ஏப்ரல் 19ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை தினம். அதனையடுத்து ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிக்ள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை. எனவே ஏப்ரல்17-21 என ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு போக அதிக வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு சென்னையில் வாக்கு இருந்தால் அந்த வாக்குகள் பதிவாகாது
 
அதேபோல் ஐந்து நாட்கள் தொடர் முறை கிடைப்பதால் கோடையை சமாளிக்க குளிர்பிரதேசங்களுக்கு பெரும்பாலான பொதுமக்கள் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதால் வாக்குசதவீதம் பெருமளவு குறையும் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் ஏப்ரல் 18ஆம் தேதி மதுரையில் சித்திரைத்திருவிழா நடைபெறும் நாள் என்பதால் மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ளவர்கள் திருவிழா பார்க்க சென்றுவிட அதிக வாய்ப்புகள் இருப்பதால் வாக்கு சதவீதம் எதிர்பார்த்த அளவு இருக்குமா? என்பது கேள்விக்குறியே. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்