திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 31 டிசம்பர் 2018 (17:38 IST)

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதியில் ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்கும்ன்றம் தொகுதியின் தேர்தல் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த தொகுதியின் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதே தேதியில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், ஜனவரி 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும், 11ஆம் தேதி வேட்புமனு பரிசீலிக்கப்படும் என்றும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி தேதி ஜனவரி 14 என்றும், வாக்குப்பதிவு ஜனவரி 28ஆம் தேதி என்றும், ஜனவரி 31ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது