1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 நவம்பர் 2022 (09:21 IST)

ஆவின் பால் லிட்டருக்கு ரூ.12 உயர்வு? – திடீர் முடிவால் மக்கள் அதிர்ச்சி!

Aavin orange milk
ஆவின் நிறுவனம் பல்வேறு பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் நிலையில் ப்ரீமியம் பால் பாக்கெட்டின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

சமீப காலமாக தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் பால் பாக்கெட்டுகளின் விலையை சன்னமாக உயர்த்தியுள்ளன. இந்த ஒரு ஆண்டில் மட்டும் 4 முறை தனியார் பால் பாக்கெட் விலை உயர்ந்துள்ள நிலையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தொடர்ந்து ஒரே விலையில் விற்பனையாகி வருகின்றன.

கடந்த சில நாட்களாக பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்க வேண்டுமென ஆவின் நிறுவனத்திற்கு கோரிக்கைகள் விடுத்து வந்தனர். அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை ஈடு செய்ய ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது.


இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K