செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (14:06 IST)

90 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் பால் – ஆவின் அறிமுகம்!

ஆவின் நிறுவனம் 90 நாட்கள் வரை இருக்கும் டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை அறிமுகம் செய்துள்ளது.


கடந்த சில காலமாக தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பால் பாக்கெட் விலையை உயர்த்தியுள்ள நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான ஆவினின் பால் பாக்கெட்டுகள் தனியார் நிறுவனங்களை விட லிட்டருக்கு ரூ.22 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தக் கூடிய டிலைட் என்ற புதிய பால் பாக்கெட்டை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த டிலைட் பால் குளிர்சாதன வசதி ஏதும் இல்லாமல் 90 நாட்கள் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம். ஆவின் டிலைட் பால் 500 மி.லி பாக்கெட் ரூ. 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சோழிங்கநல்லூரில் உள்ள ஆவின் ஆலையில் ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் UHT பாலை பேக் செய்ய முடியும், குறுகிய அறிவிப்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு லட்சம் லிட்டர் டிலைட் பசும்பால் நிரம்பிய யுஎச்டி (அல்ட்ரா-ஹை டெம்பரேச்சர்) தொழில்நுட்பத்துடன் 90 நாட்கள் ஆயுட்காலம் கொண்ட ஆவின், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.