வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2024 (08:41 IST)

ஆடி அமாவாசை திருவிழா! சொரிமுத்து அய்யனார் கோவில் செல்ல கட்டுப்பாடுகள்!

Sorimuthu Ayyanar Temple

காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழாவிற்கு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

ஆடி அமாவாசையில் காரையாறு காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா ஆகஸ்டு 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக நேற்று கால்நாட்டு விழா நடைபெற்ற நிலையில் திருவிழாவிற்கு ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்டு 8ம் தேதி வரை மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னேற்பாடு பணிகள் காரணமாக ஜூலை 1ம் தேதி மற்றும் ஆகஸ்டு 1ம் தேதி அகஸ்தியர் அர்ய்வி, காரையாறு பகுதிகளுக்கு அரசு, தனியார் பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் அனுமதி இல்லை
 

 

திருவிழாவையொட்டி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பக்தர்கள் தங்கும் குடில்கள் அமைத்துக் கொள்ளலாம். வனப்பகுதிகளில் குடில்கள் அமைக்க அனுமதி இல்லை.

 

திருவிழாவை ஒட்டி ஆகஸ்டு 2ம் தேதி காலை 6 மணி முதல் 4 மணி வரை தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். ஆகஸ்டு 4ம் தேதி மாலை 4 மணி முதல் ஆகஸ்டு 5ம் தேதி வரை தனியார் வாகனங்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து அனுமதிக்கப்படாது.

 

கோவில் தவிர்த்து வனப்பகுதி, ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கு அனுமதி இல்லை. பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்ணெண்ணெய் போன்ற தீ ஏற்படுத்தும் பொருட்கள், மது, குட்கா பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K