செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (21:11 IST)

செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்!

செருப்பை கழற்ற சொன்ன அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார்!
முதுமலை யானைகள் முகாமுக்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முதுமலையில் உள்ள யானைகள் சரணாலயத்தில் புத்துணர்வு முகாமை தொடங்கி வைக்க வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார். முகாமை தொடங்கி வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்த அமைச்சர் காலில் செருப்பு பலமாக மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது.
 
அப்போது அங்கிருந்த பழங்குடி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழட்டிவிடும்படி கூற அந்த சிறுவனும் கழட்டி விட்டுள்ளான். இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் சிறுவனை செருப்பை அகற்ற சொன்னது தவறு என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், செருப்பை கழற்ற வைத்த விவகாரத்தில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி - மசினக்குடி காவல் நிலையத்தில் மாணவர் புகார் அளித்துள்ளார்,